சகீப் அல் ஹசனின் அவுட் நாட் அவுட்டா : சர்ச்சையான நடுவரின் ரிவ்யூ
பாகிஸ்தானுக்கு எதிரான போடியில் வங்க தேச அணியின் கேப்டன் அல்ஹசனுக்கு அவுட் வழங்கியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றது.இந்த நிலையில் பாகிஸ்தான் அணியுடன் வங்கதேச அணி மோதிய போது அணியின் கேப்டன் ஷகீப் அல்ஹசனுக்கு வழங்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஷதாப் கான் வீசிய பந்தை எதிர்க்கொண்ட ஷகீப் முதல் பந்தை எதிர்க்கொண்ட நிலையில் அதில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். ஷகீப்பிற்கு எதிராக ஷதாப் கான் நடுவரிடம் எல்.பி.டபுள்யூ அவுட் கேட்க அவர் அவுட் கொடுத்தார்.
சர்ச்சையான ரிவ்யூ
இதையடுத்து, நடுவரின் முடிவுக்கு எதிராக ஷகீப் ரிவ்யூ எடுத்தார். ரிவ்யூவில் ஷகீப் பேட்டில் பந்து படுவது போன்று காட்சிகள் தெரிந்தது. ரிவ்யூ செய்தபோது ஷகீப்பின் பேட்டிற்கும் தரைக்கும் சிறிது இடைவெளி இருப்பதும், பந்தின் மீது பேட் உரசுவதற்கான காட்சிகளும் தெளிவாக தெரிந்தது.
ஆனாலும், 3-ம் நடுவர் ஷகீப் அல் ஹசனுக்கு அவுட் கொடுத்தார். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ரிவ்யூவிலும் அவுட் கொடுத்ததால் ஷகீப் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
ஷகீப் அல் ஹசனுக்கு அவுட் கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.