சென்னையில் தோனி - மாலை தூவி ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள் !
ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து முதல் முறையாக சென்னை வந்துள்ள எம்எஸ் தோனிக்கு ரசிகர்கள் உற்ச்சாக வரவேற்ப்பு அளித்துள்ளனர்.
சென்னை வருகை
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங்க் தோனி அண்மையில்தான் இவரின் 42-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது . நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை அடுத்து முதல் முறையாக மனைவி சாக்ஷியுடன் நேற்று சென்னை வந்துள்ளார் தோனி.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களை ரசிகர்கள் மாலை தூவி உற்ச்சாகமாக வரவேற்றனர்.
'எல்.ஜி.எம்" இசை வெளியீடு
தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தயாரிப்பு நிறுவனம்தான் "தோனி எண்டர்டெயின்மென்ட்". இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் முதல் திரைப்படம் 'எல்.ஜி.எம்".
இதில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். அண்மையில் இந்த திரைப் படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து இந்த தபடத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடக்கவிருப்பதால் அதில் கலந்து கொள்ள எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் சென்னை வந்துள்ளனர்.