1 வாரத்திற்கு பின் குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 16 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை அட்சயதிருதியை முன்னிட்டு சரிவைக் கண்டது. தற்போது மீண்டும் ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் 1 வாரத்திற்கு பின் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சற்று குறைவு
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 5,640 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.45,120 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 4,620 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.36,960 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனையாகிறது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan