புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

modi congress cabinet narayanaswamy
By Jon Mar 01, 2021 05:59 PM GMT
Report

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு சமீபத்தில் கவிந்தது. இதனைத் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், தேர்தலுக்கு இரண்டு மாதங்களே இருப்பதால் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய உள்துறைக்கு கடிதமும் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.