சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவர்கள் உயிரிழப்பு
திருப்பூர் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி அருகில் விவேகானந்தா ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கியுள்ளனர்.
இந்த காப்பகத்தில் இன்று காலை வழக்கம் போல் உணவு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் உணவை சாப்பிட்ட பின்னர் சிறுவர்கள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிடிவி தினகரன் வேண்டுகோள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சரியான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 6, 2022
இச்சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். (2/2)