ரோஜ்கர் மேளா திட்டம் - ரயில்வேயில் 50 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை

Government Of India
By Thahir Mar 21, 2023 05:42 AM GMT
Report

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் ரயில்வே துறையில் விரைவில் 50,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

ரோஜ்கர் மேளா திட்டம் 

மத்திய அரசு துறையில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டிருந்தது , இதன் படி கடந்த அக்டோபர் 22-ம் தேதி ரோஜ்கர் மேளாவை (வேலை வாய்ப்பு திருவிழாவை ) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் ,அன்றய தினம் முதல் கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை வழங்கினார்.

50,000 பேருக்கு பணி நியமன ஆணை 

இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக மத்திய அரசு பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டது . அடுத்த கட்டமாக ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ரோஜ்கர் மேளாவின் மூலம் ரயில்வே துறையில் 50,000 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளது .

Appointment order for 50 thousand people in railways

ரயில்வே துறையில் மொத்தம் 3.15லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன ,இந்த காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்படும் ,விரைவில் கர்நாடக சட்டசபை ப்பேரவை தேர்தல் நடை பெறுவதால் ,அதற்கு முன்னதாக ரோஜ்கர் மேளா நடத்தப்பட்டு , ரயில்வே துறை குரூப் சி பிரிவில் சுமார் 50,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்ப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .