30 சிறப்பு அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு : காரணம் என்ன?

M K Stalin DMK
By Irumporai Oct 06, 2022 07:19 AM GMT
Report

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். தமிழக முதலமைச்சராக  மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டது.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு பல்வேறு நலத் திட்டங்கள்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

குறிப்பாக நகரப் பேருந்துகளில் மகளிர் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் ஆகியோருக்கு இலவச பயணம்,7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் , உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 மாதம் தோறும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளன.

30 சிறப்பு அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு : காரணம் என்ன? | Appointment Of 30 Special Officers To Monitor

சிறப்பு அதிகாரிகள் நியமனம்

இந்த நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறப்பு திட்ட செயலாக்க துறையின் திட்டங்களின் நிலை குறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது