#மகளிர்உரிமைத்தொகை - இன்னும் 1000 ரூபாய்..இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!!
திமுக அரசால் துவங்கப்பட்டுள்ள 1000 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காதவர்கள் மீண்டும் மேல்முறையீடு எளிதில் செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகளிர் உரிமை தொகை
தமிழக திமுக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம் மகளிர் உரிமை தொகை. ஏழை, எளிய மகளிருக்கு உதவும் வகையில் இந்த தொகை இம்மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் தற்போது 1 கோடியே 6 லட்சம் மகளிர் பயன் பெற்று வருகின்றனர்.
இதில் தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பலரும் புகார் அளித்த நிலையில், மீண்டும் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தகவல்கள் குறித்து தற்போது காணலாம்.
அனைத்தும் இணையவாயிலாகவே செய்யலாம்
விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்வதாக இருந்தால், குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அருகிலுள்ள இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
இவ்வாறு பெறப்படும் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுகிறார். மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்கள், அரசு தரவு தளங்களிலுள்ள தகவல்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டு, மீண்டும் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்படும்.
பின்னர் இதில் கள ஆய்வு தேவைப்படும் நேரங்களில் மட்டும் செய்யப்படும். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும். மேல்முறையீடு நடவடிக்கைகள் அனைத்தும் இணையதள வாயிலாகவே செய்யப்படும்.