ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்

russia apple
By Irumporai Mar 02, 2022 04:46 AM GMT
Report

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும் விற்பனையையும் நிறுத்தியுள்ளது.

உக்ரைனுக்கும் ,ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் இன்னும் ஓயவில்லை. ஒவ்வொரு நாளும் தாக்கல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும் விற்பனையையும் நிறுத்தியுள்ளது. ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் எங்கள் விற்பனையை அனைத்தையும் நாங்கள் நிறுத்திவிட்டோம்.

இனி ரஷ்யாவில் உள்ள Apple App Store இல் இருந்து எதையும் பதிவிறக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் டெக் உலகில் தனி இடத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவில் தனது விற்பனையினை நிறுத்தியது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.