அட்டகாச அம்சங்களுடன் ஐபோன் 16 சீரிஸ் - இந்தியாவில் விலை என்ன தெரியுமா?
ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 16 சீரிஸ்
முன்னணி இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தனது ‘இட்ஸ் க்ளோ டைம்’ நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது.
ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் வெளிவந்துள்ளது. பிளாக் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம் மற்றும் புதிய டெசர்ட் டைட்டானியம் ஆகிய 4 நிறங்களில் கிடைக்கிறது.
விலை தெரியுமா?
ஐபோன் 16 ப்ரோ மாடல் 6.3 இன்ச் டிஸ்பிளே வசதியுடனும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.9 இன்ச் டிஸ்பிளேவுடனும் பெற்றுள்ளது. ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் 48 எம்.பி ஃப்யூஷன் கேமராவைக் கொண்டுள்ளது. டால்பி விஷனில் 4K வீடியோவை எடுக்கலாம்.
இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மாடல் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் விலையிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 900 ரூபாய் விலையிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 13-ம் தேதி இந்தப் புதிய ஐபோன்களை முன்பதிவு செய்யலாம்.
செப்டம்பர் 20-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 128 GB ஸ்டோரேஜ் உடன் கூடிய ஐபோன் 16-ன் விலை இந்தியாவில் ரூ.79,990 ஆகவும், இதற்கடுத்த மாடலான ஐபோன் 16 ப்ளஸின் விலை ரூ.89,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.