சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள்; அப்போவே எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா? அடேங்கப்பா..!

Sumathi
in பிரபலங்கள்Report this article
சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஏலம் போன தகவல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சில்க் ஸ்மிதா
80ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.
இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் ஆகி மணமுறிவு ஏற்பட்டது.
கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.
ஆப்பிள் ஏலம்
இவர் தற்கொலை செய்துக்கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒரு படத்தின் ஷூட்டிங்கில் சில்க் ஸ்மிதா ஒரு ஆப்பிளை கடித்துவிட்டு தன் அருகில் வைத்திருக்கிறார்.
அதை கவனித்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒருவர் அந்த ஆப்பிளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். அதனையடுத்து, அந்த ஆப்பிளை சில்க் கடித்த ஆப்பிள் என்று ஒரு இடத்தில் வைத்து ஏலம் விட்டிருக்கிறார்.
அதில், அப்போதே 200 ரூபாய் வரை சென்றுள்ளது. இந்தத் தகவலை செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.