ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Chennai Madras High Court
By Thahir Nov 23, 2022 10:26 PM GMT
Report

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி கோரி மேல்முறையீடு 

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பரப்பட்டு இருந்தது.

Appeal in High Court seeking permission for RSS procession

இந்த வழக்கின் கீழ், அப்போது 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாகவும், 6 இடங்களில் ஊர்வலமாகவும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்தி கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த அனுமதியை எதிர்த்து, தற்போது சுப்ரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து உள்ளார். கருத்து சுதந்திரம், மற்ற கட்சியினருக்கு அனுமதி வழங்குவது போன்ற கருத்துக்களை முன்வைத்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.