ஓபிஎஸ்-ன் துாது அஞ்சல் எடுபடவில்லை...எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு
அதிமுக ஜுலை 11 பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் தீர்ப்பு
நேற்று உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், அதிமுகவில் ஜுன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்டத்தை கூட்ட வேண்டும் ஈபிஎஸ்-ஐ பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு தனி கூட்டம் கூட்டக் கூடாது பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு
இந்த நிலையில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்கட்சியாக மக்கள் விரோத போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அதிமுக உள்ளது.

ஒருங்கிணைப்பாளர்கள் அதிமுக தொண்டர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அதிமுவின் சட்டவிதி புதிய அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் முறைபடி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைபெற்றது.
கடந்தாண்டு டிசம்பரில் முறைப்படி தேர்தல் நடைபெற்றது, அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக நானும், இபிஎஸ்-ம் தேர்ந்தெடுக்கப்பட்டோம். எங்களுக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளால் முந்தைய காலங்களில் திமுக ஆட்சியை பிடிக்கும் சூழல் இருந்தது.
எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது மீண்டும் தமிழகத்தில் ஆளும் பொறுப்பிற்கு ஏற்ப, கழகம் ஒன்றுபட வேண்டும்; ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கசப்புகளை மறந்த அனைவரும் ஒன்றுபட்டு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.
எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டதால் திமுக உருவானது அதன் பிறகு ஆளும் பொறுப்பை அதிமுக ஏற்றது. ஜனநாயக ரீதியில் ஆளுங்கட்சிக்கு உரிய எதிர்கட்சியாக மக்கள் விரோத போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் அரசியல் கட்சியாக அதிமுக உள்ளது. என இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்தார்.
இபிஎஸ் மேல்முறையீடு
இந்த நிலையில் நேற்று நீதிமன்றம் அளித்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை விசாரிக்க உள்ளது.