பேரவையில் தர்ணா - அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு
பேரவையில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுப்பட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
அவைக்குள்ளேயே அமர்ந்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது, திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தஞ்சாவூரில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. 11 விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்திருக்கிறோம் அத்திவரதரை 50 இலட்சம் பேர் தரிசனம் செய்தார்கள்.
முழுமையான பாதுகாப்பு அளித்தோம் என்றார். தஞ்சை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் தேர் விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும். மதுரையில் கள்ளழகர் வகையில் இறங்கும்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
சட்டபேரவையில் மீண்டும் பேச அனுமதி கோரி அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.