'கனத்த இதயத்தோடு தான் அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டேன்' - சபாநாயகர் அப்பாவு விளக்கம்
தஞ்சையில் நிகழ்ந்த தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவண் ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நிலையில், திருவிழா காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், பேரவையில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுப்பட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவைக்குள்ளேயே அமர்ந்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
திருவிழா காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே பேசிவிட்டு அவர்களாகவே வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பிறகு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மாணம் மீது மீண்டும் பேச அனுமதிக்க முடியாது எனவும், அதிமுகவினர் மீண்டும் பேச முற்பட்டதால் தான் அனுமதி கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், முனுசாமி, கோவிந்தசாமி ஆகியோர் அமைச்சரை ஒருமையில் பெசியது வருத்தமளிக்கிறது என தெரிவித்த சபாநாயகர், கனத்த இதயத்தோடு தான் அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டேன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் முதலாவதாக நடைபெறும் நிகழ்வு என்பதால் மன்னித்து விடலாம் என எண்ணுகிறேன், எனவே இன்று நடந்தது இன்றோடு போகட்டும்.
வரும் காலங்களில் மரபு மீறிய செயல்கள் அவையில் நடைபெறக் கூடாது. இன்று நடந்த சம்பவத்தை மறப்போம் மன்னிப்போம் என தெரிவித்தார்.