''ஆறுமுகசாமி ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு" - திடீரென ஜகா வாங்கிய அப்பல்லோ நிர்வாகம் ?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக கடந்த ஐந்து வருடமாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என யாருக்குமே தெரியவில்லை.
இதற்காக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு ஏற்படுத்தியது.
ஆனால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து உச்ச நீதிமன்றத்தில் விலக்கு கேட்டு மேல் முறையீடு செய்துள்ள அப்பல்லோ நிர்வாகம். அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் பாரபட்சமாக ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர்களை விசாரிக்கும் ஆணையத்தில் ஒரு மருத்துவ நிபுணர் கூட இல்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில், ஆணையத்திற்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க தயார் என்றும், உதவியாக மருத்துவர் குழுவையும் ஆணையத்துடன் இணைக்கலாம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிமன்றம், ஆணையத்துக்கு போதுமான இடவசதி உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் நீதிமன்றத்தைப் போல சூழலை நவ.30ஆம் தேதிக்குள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.
மேலும் இந்த விஷயத்தில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில், எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிடப்படும் என்று கூறி, தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
அப்பல்லோவுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆணையத்துக்கு ஆதரவாகவே அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனைப் புரிந்துகொண்ட அப்பல்லோ தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை விசாரணை குழுவில் அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது