சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
சீனாவின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங் மாகாணம் உரும்கியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் அளவு கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் இருளில் முழு்கியது.

தீ மளமளவென வேகமாக பரவியதால் கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
10 பேர் உயிரிழப்பு
தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 10 பேர் மூச்சு திணறியும், உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்து எப்படி? எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரும், தீயணைப்புத்துறையினரும்