'மஞ்சும்மல் பாய்ஸ்' பட நடிகரை திருமணம் செய்யும் நடிகை அபர்ணா தாஸ் - ரசிகர்கள் வாழ்த்து!
தீபக் பரம்போல் என்ற மலையாள நடிகரை நடிகை அபர்ணா தாஸ் திருமணம் செய்யவிருக்கிறார்.
அபர்ணா தாஸ்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். அதனைத் தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான 'டாடா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
கடைசியாக சீக்ரெட் ஹோம் என்ற மலையாள படத்தில் அபர்ணா தாஸ் நடித்திருந்தார். இந்நிலையில் தீபக் பரம்போல் என்ற மலையாள நடிகரை, அபர்ணா தாஸ் திருமணம் செய்யவிருக்கிறார்.
திருமணம்
தீபக் பரம்போல் சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ் ' படத்தில் நடித்திருக்கிறார். இவர்களின் திருமணம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி வடக்காஞ்சேரி என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபர்ணா தாஸ் பதிவிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.