சூர்யா சார் மாதிரிதான் பார்ட்னர் வேணும்... ரகசியம் உடைத்த நடிகை அபர்ணா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருந்து பல லட்சணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் சூர்யா. அமேசான் பிரைமில் அவரது சூரரை போற்று படத்தை வெளியிட்டிருந்து நல்ல வரவேற்பை பெற்றார்.
நடிகர் சூர்யா
இப்படத்தின் மூலன் ரசிகர்களிடையே ஆழமாக பதிந்த நடிகையாக அப்படத்தின் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு கிடைத்துள்ளது.பலரும் தற்போது தனக்கு பொம்மி போன்ற பெண் தான் வேண்டும் என அடம் பிடிக்கும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

அபர்ணா பாலமுரளி தமிழில் ஏற்கனவே 8 தோட்டாக்கள் மற்றும் சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சூரரைப்போற்று படம்தான் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
பொம்மி
மேடையில் பேசிய அபர்ணா பாலமுரளியிடம் உங்களுக்கு எந்த மாதிரி லைப் பார்ட்னர் வேண்டும் என எதிர்பாக்கறிங்க என கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், ’நான் ஜோதிகா மேம்-ன் நிறைய இண்டர்வியூக்களை பார்த்திருக்கேன்.

அதில் அவங்க சூர்யா சார் எப்படின்னு நிறைய பகிர்ந்திருக்காங்க.அதை பார்த்ததில் இருந்தே எனக்கு சூர்யா சார் மாதிரியான பார்ட்னர்தான் வேணும்னு முடிவு செய்துட்டேன். நான் தேர்ந்தெடுக்கறவர் ரெஸ்பெக்ட் கொடுக்கத் தெரிஞ்சவரா, ஜெண்டில்மென்னா, என் விஷயங்களில் எதுவும் குறுக்கிடாதவரா இருக்கனும்.’ என்றார்.
சூர்யா சார் மாதிரி பார்ட்னர்
பொம்மி பாத்திரம் குறித்து கேள்வி எழுப்பியதும், பொம்மியாகத் தான் தோன்ற தன்னைவிட மிகவும் உழைத்தது படத்தின் இயக்குநர் சுதா கொங்கராதான் என்றார். படம் சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு, பல்வேறு விருதுகளையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அபர்ணா அண்மையில் ஆர்.ஜே பாலாஜியுடன் வீட்ல விசேஷம் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நித்தம் ஒரு வானம் படத்திலும், கார்த்தியுடன் தலைப்பிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan