அந்தமாதிரி ஆண்களை தான் பிடிக்கும்; பெண்களிடம் அதை அறிந்து.. - அபர்ணா பாலமுரளி!
எப்படி இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்பது குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி பேசியுள்ளார்.
அபர்ணா பாலமுரளி
எட்டு தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தொடர்ந்து சர்வம் தாளமயம், சூரரைப் போற்று, வீட்ல விசேஷம், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அபர்ணா பாலமுரளி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், எப்படி இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
அவர் கூறியதாவது "பொதுவாகவே பெண்களிடம் கண்ணியமாக அதே நேரத்தில் எல்லை தாண்டாமல் அவர்களின் எல்லையை அறிந்து செயல்படும் ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்.
ஒரு ஆண் எந்த நேரத்தில் தன்னுடைய வரம்பை தாண்டி உள்ளே வருகிறானோ, அப்போதே அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணை பிடிக்காமல் போய்விடும்.
அது வேலை செய்யக்கூடிய இடமாக இருந்தாலும் சரி, காதலனாக இருந்தாலும் சரி, நண்பனாக இருந்தாலும் சரி, பெண்களிடம் எப்போதும் அவர்கள் எல்லை அறிந்து செயல்படும் ஆண்களே பேராண்மை கொண்டவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.