பேரவையில் கடுப்பான முதல்வர்: நடந்தது என்ன?
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை நேரத்தின் போது தன்னைப் புகழ்ந்து பேசினால் அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாத நேரத்தின்போது, தன்னைப் புகழ்ந்து பேசுவதை திமுக எம்எல்ஏக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்றே கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முதலமைச்சர் ஸ்டாலினைப் புகழ்ந்தார்.
அப்போது , அவரை இடைமறித்த முதலமைச்சர் எதையும் லிமிட்டாக வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாகக் கட்டளையிட்டேன், அதையும் மீறி இன்று புகழ்ந்து பேசியதால் ஐயப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.