தபால் ஓட்டு யார் யார் விண்ணப்பிக்கலாம்

india world election
By Jon Mar 03, 2021 02:17 PM GMT
Report

வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை தபால் வாக்கிற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளவர்கள் வரும் 12-ம் தேதி முதல் 16ம் தேதி வரை தபால் வாக்கிற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். .

தபால் வாக்களிக்க தகுதியானவர்களின் பட்டியல் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தினம் அன்று பணியில் இருக்க கூடிய முக்கிய ஊடகவியலாளர்கள் தபால் ஓட்டு செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது .