மம்தாவை விமர்சித்தாலோ..கை நீட்டி பேசினாலோ விரல்கள் உடைக்கப்படும் - அமைச்சர் சர்ச்சை பேச்சு!
மம்தாவை விமர்சித்தால் விரல்களை உடைப்போம் என திரிணாமுல் அமைச்சர் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
அமைச்சர்
கொல்கத்தாவில் பயிற்ச்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. அதனை கண்டித்து ல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான், முதல்வர் மம்தாவை விமர்சித்தாலோ, கை நீட்டி பேசினாலோ அவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அதாவது நிகழ்ச்சி ஒன்றில் மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா பேசுகையில், கொல்கத்தா மருத்துவர் கொலை சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துப் பேசுபவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
சர்ச்சை பேச்சு
பின்னர், அவர்களுடைய விரல்கள் உடைக்கப்படும். இல்லையென்றால் இதுபோன்ற நபர்கள் மேற்கு வங்க மாநிலத்தை வங்கதேசமாக மாற்றிவிடுவார்கள். அரசு மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவத்தின்போது கூட காவல் துறையினர் யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை.
வங்கதேசத்தில் நடந்தது போன்ற ஒரு நிலைமையை அரசு இங்கே ஒருபோதும் அனுமதிக்கவே அனுமதிக்காது. மேற்குவங்க மாநில மக்களின் உதவியுடன் அந்த முயற்சியை நாங்கள் முறியடிப்போம் என்றார்.
அமைச்சர் உதயன் குஹாவின் இந்த வீடியோ சற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உதயன் குஹாவின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் தலிபான் மனநிலையை இந்தப் பேச்சு காட்டுகிறது என்று பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.