''நான் பகல் இரவு நீ கதிர் நிலவு '' - அனுஷ்காவை புகழ்ந்த விராட்கோலி

anushkasharma viratkohl
By Irumporai Nov 05, 2021 10:37 PM GMT
Report

நீ தான் எனது பலம், என்னை இயக்கும் ஆற்றல்,'' என மனைவி அனுஷ்கா சர்மாவை புகழ்ந்துள்ளார் விராட் கோலி.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி. நேற்று தனது 33வது பிறந்தநாள் கொண்டாடினார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன.

இந்த நிலையில் விராட் -ன்  பிறந்த நாளுக்காக அனுஷ்கா சர்மா, தனது 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்தார்.

இருவரும் உள்ள போட்டோவை வெளியிட்ட அவர் கூறியது:

நீங்கள் வாழ்க்கை வழிநடத்தும் முறையையும், இந்த போட்டோவையும் பிரித்துப் பார்க்க 'பில்டர்' எதுவும் தேவையில்லை. ஏனெனில் உங்கள் வாழக்கை நேர்மை, துணிச்சலால் உருவானது.

கடினமான பாதைகளில் இருந்து முன்னேறி வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றியதில் உங்களைப்போல வேறு யாரும் இல்லை என எனக்குத் தெரியும். அனைத்து வழிகளிலும் சிறப்பாக செயல்படுகிறீர்கள்.

வழக்கமாக இப்படி சமூக ஊடகங்கள் வழியாக பேசுபவர்கள் நாம் அல்ல எனத் தெரியும். ஆனால் நீங்கள் எவ்வளவு சிறந்த மனிதர், அதிர்ஷ்டமானவர் என்பதை சில நேரங்களில் இந்த உலகத்திற்கு சப்தமாக சொல்ல விரும்புகிறேன்.

எனது வாழ்க்கையில் அனைத்தையும் அழகாகவும், சிறப்பாகவும் உருவாக்கி வரும் உங்களுக்கு நன்றி. எனது அழகிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்குப் பதில் தந்த விராட் தனது  ட்விட்டர் பதிவில், 'நீ தான் எனது பலம், என்னை இயக்கும் ஆற்றல், ஒவ்வொரு நாளும் நாம் ஒன்றாக இணைந்திருக்க உதவிய கடவுளுக்கு நன்றி,' என தெரிவித்துள்ளார்.