40 விபத்துக்களை ஏற்படுத்திய அனுஷ்காவின் புகைப்படம் - ஷாக் தகவல்

Anushka Shetty Tamil Cinema Hyderabad
By Sumathi Jun 07, 2025 11:19 AM GMT
Report

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 40 விபத்துகள்

தெலுங்கு, தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. கடைசியாக அவரது நடிபில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வெளியானது.

anushka

ஆனால் உடல் எடை கூடியதன் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. தற்போது காதி என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை ஏற்கனவே அனுஷ்காவின் வேதம் படத்தை இயக்கிய கிரிஷ்தான் இயக்கியுள்ளார்.

”தமிழ்நாடு வாழ்க”.. 5 மொழிகளில் போட்ட போஸ்ட் - கமல்ஹாசன் திட்டவட்டம்

”தமிழ்நாடு வாழ்க”.. 5 மொழிகளில் போட்ட போஸ்ட் - கமல்ஹாசன் திட்டவட்டம்

இயக்குனர் தகவல்

இப்படம் ஜூலை 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் வேதம் ரிலீஸாகி 15 வருடங்கள் முடிவடைந்த நிலையில் கிரிஷ் அதுகுறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். "வேதம் படத்தின் விளம்பரத்துக்காக அனுஷ்காவின் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை ஹைதராபாத்தில் இருக்கும் பஞ்சகுட்டாவில் வைத்தோம்.

director krish

அப்போது அந்த போஸ்டரை ஓட்டுநர்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள். ஒருகட்டத்தில் அந்த போஸ்டரை பார்த்ததால் கிட்டத்தட்ட 40 விபத்துக்கள் ஏற்பட்டன. அது எங்களுகு விசித்திரமாக இருந்தது.

அதனையடுத்து காவல் துறை கேட்டுக்கொண்டதால் அந்த போஸ்டரை அவ்விடத்திலிருந்து எடுத்துவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.