இந்தியாவை புறக்கணிக்கவே முடியாது - பாகிஸ்தான் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி!
கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பை புறக்கணிக்கவே முடியாது என்று பாகிஸ்தான் விளையாட்டு துறைக்கு மத்தியமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார்.
T20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது
இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. மேலும், வேறு ஒரு பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று ஜெய்ஷா தெரிவித்தார்.
பாக்.ரமீஸ் ராஜா கண்டனம்
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை புறக்கணிக்க உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்தது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவின் பேச்சுக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலடி
இந்நிலையில், மத்திய அமைச்சர் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் இன்று நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் -
"ஒருநாள் உலகக் கோப்பையும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இந்தப் போட்டி மிக பிரமாண்டமான மற்றும் வரலாற்று நிகழ்வாக அமைய உள்ளது. அடுத்த ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையில் அனைத்து முன்னணி அணிகளும் பங்கேற்க இருக்கிறது. கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பை புறக்கணிக்கவே முடியாது.
எந்த விளையாட்டிலும் இந்தியாவை புறக்கணிக்கவே முடியாது. பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவலைகள் உள்ளதால், ஆசிய கோப்பை போட்டி தொடர்பாக உள்துறை அமைச்சகம் இது குறித்து முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
2005ம் ஆண்டு மற்றும் 2006ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இருதரப்பு தொடரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.