நோய் எதிர்ப்பு சக்திகயை பலமடங்கு அதிகரிக்கும் வெள்ளை 'டீ'
நாம் ஆரோக்கியமாக வாழ நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் வேண்டும். அதற்கு பல சத்தான உணவு பழக்க வழக்கங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியாக, ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் உடல் அழற்சியைப் போக்கக் கூடியது. அந்த ஆன்டி ஆக்சிடண்ட் தரக்கூடிய சில முக்கியமான டீ இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

1. ப்ளாக் டீ:
இங்கு நாம் பெரும்பாலும் குடிக்கக்கூடிய ப்ளாக் டீ. பச்சை, வெள்ளை மற்றும் ஊலாங் டீ வகைகள் எல்லாமே காமெடியா சைனென்சிஸ் என்ற செடியிலிருந்து கிடைக்கிறது. அதாவது ப்ளாக் டீ இலைகள் புளிக்க வைக்கப்பட்டு பின் தயார் செய்யபடுகிறது.
இந்த இலையில் பாலிஃபினால்கள் இருக்கின்றன. கூடுதலாக ஃப்ளேவினாய்டு, காடெசின் மற்றும் தியாஃப்ளேவின்களும் உள்ளது. ஆதலால் இவை முழுவதுமாக ஆக்சிடைஸ் ஆகிறது. இதை எடுத்துக்கொள்ளும் பொழுது மாரடைப்பு, நீரிழிவு போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாத்துகிறது.
2. க்ரீன் டீ :
நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய டீ வரிசையில் க்ரீன் டீ இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இவை மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதிலும், ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையை குறைப்பதிலும் சுழற்சியையும் நீக்குகிறது.
மேலும், இதில் காடேசின் என்ற ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. எபிகாலோகாடெசின் 3 என்ற பாலிஃபினால் இதில் அதிக அளவில் உள்ளதால் அழற்சி புற்றுநோய் நரம்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது. இந்த டீயை அவரவருக்கு பிடித்தது போல் குளிர்ச்சியாகவும் சூடாகவும் குடிக்கலாம்.

3. வெள்ளை டீ :
இந்த டீ சீனாவில் மிகவும் புகழ் பெற்ற தேனீராகும். இந்த வெள்ளை டீயில் மற்ற தேனீர்களை விட அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. அதோடு இந்த டீயில் கேஃபின் குறைந்த அளவே உள்ளது. அதோடு இந்த தேனீர் நம்முடைய கொழுப்புச்சதது மற்றும் ட்ரைக்ளிசரைடுகள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. மேலும், பூக்களின் சுவையை கொண்ட இந்த டீயை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.