சோஷியல் மீடியாவில் தவறான கருத்து பதிவிட்டால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் - காவல் ஆணையர்
கோவையில் நேற்று முன்தினம் பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம். 92 இஸ்லாமிய ஜமாத் அமைப்புகளை சந்தித்து ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும் மாலை 3 மணிக்கு இந்து அமைப்புகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் மக்கள் பதற்றம் அடையும் வகையில் செய்திகள் பரப்பப்படுகிறது. ஒரிரு நாட்களில் குற்றவாளிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
சோஷியல் மீடியாவில் மோதல் உண்டாகும் வகையில் கருத்து பரப்பினால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.