முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்

mrvijayabaskar anticorruptiondepartment
By Irumporai Oct 19, 2021 01:05 PM GMT
Report

மீண்டும் விசாரணைக்கு ஆஜராக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து சோதனை நடத்திய நிலையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  கடந்த 30ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.