அண்டார்டிகாவில் 4 மாதங்களுக்குப் பிறகு சூரியன் உதயமானது - வைரலாகும் அரிய புகைப்படம் - மக்கள் மகிழ்ச்சி

Sunrise
By Nandhini Aug 24, 2022 04:36 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அண்டார்டிகாவில் 4 மாதங்களுக்குப் பிறகு சூரியன் உதயமான அரிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இருளில் மூழ்கிய அண்டார்டிகா

உலகத்தில் 4 பருவ காலங்கள் ஏற்படும். ஆனால், அண்டார்டிகாவில் மட்டும் கோடை மற்றும் குளிர் என்று இரு பருவ காலங்கள்தான். 6 மாதங்கள் வரை கோடையில் பகல் வெளிச்சத்துடனும், மற்றொரு 6 மாதங்களுக்கு குளிர்காலத்தில் இருள் போர்த்தியும் அண்டார்டிகா காணப்படுகிறது.

இதனையடுத்து, அண்டார்டிகாவில் இந்த ஆண்டு மே மாதம் நீண்ட இரவு தொடங்கியது. இதனால், அண்டார்டிகாவில் சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது.

சூரியன் உதயமானது

இந்நிலையில், 4 மாதத்திற்கு பிறகு அண்டார்டிகாவில் இருள் மறைந்து, சூரியன் உதிக்க தொடங்கி உள்ளது. அண்டார்டிகாவில் 4 மாதங்களாக சூழ்ந்திருந்த இருள் விலகி சூரியன் உதயமானதால் விஞ்ஞானிகளும், மக்களும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

antarctica-sunrise

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், அண்டார்டிகாவில் இருள் விலகி சூரியன் உதயமான அரிய புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி கழகம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் -