உருகும் அண்டார்டிக் பனிக் கடல் அழியுமா உலகம் ? - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

By Irumporai Feb 19, 2023 01:34 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

தொடர்ந்து இர்ண்டாவது ஆண்டாக அண்டார்டிகா பனிக்கடல் உருகிவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உருகும் கடல்

அண்டார்ட்டிக் பெருங்கடலானது பிரம்மாணடமான பனிப்பாறைகளையும், பனிக்கட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த கடல் பனி அளவானது உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வேகமாக உருகி வருவதாகவும், இதனால் கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

  ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இதனிடையே அண்டார்டிகாவின் கடல் பனி அளவு குறித்த அறிக்கையை தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அறிக்கை கடந்த 13-ந்தேதி வரை கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அண்டார்டிகா கடல் பனி அளவு 1.91 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறிப்பிடப்பட்டுள்ளது.

உருகும் அண்டார்டிக் பனிக் கடல் அழியுமா உலகம் ? - எச்சரிக்கும் ஆய்வாளர்கள் | Antarctic Sea Ice Researchers Warn

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும் . கடந்த ஆண்டு பிப்ரவரி 25 வரையிலான கணக்கெடுப்பில் 1.92 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது. அது அதற்கு முந்தைய ஆண்டை விட மிகக் குறைந்த அளவாக பதிவானது. தற்போது தொடர்ந்து 2-வது ஆண்டாக குறைந்தபட்ச பனி அளவு பதிவாகி உள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் பிப்ரவரி 18 முதல் மார்ச் 3 வரை பனி அளவு கடுமையாக சரிந்துள்ளது. எனவே, இந்த ஆண்டிற்கான பனி அளவில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.