தொடர் சொதப்பலில் அஸ்வின்; இது சரிப்பட்டு வராது - திடீர் முடிவெடுத்த தோனி
அஸ்வினுக்கு மாற்றாக வேறு வீரரை களமிறக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.
சொதப்பும் அஸ்வின்
ஐபிஎல் 18ஆவது சீசனில் 7 வருடங்களுக்கு பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கேவில் கம்பேக் கொடுத்துள்ளார். இதனால், அஸ்வின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில்,
முதல் மூன்று போட்டிகளிலும் மொத்தமே 3 விக்கெட்களைதான் எடுத்துள்ளார். இது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மற்ற இரண்டு ஸ்பின்னர்கள் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
தோனி முடிவு
நூர் அகமது 3 போட்டிகளில் 9 விக்கெட்களை எடுத்துள்ளார். ஜடேஜா சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்து, எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறார். இந்நிலையில், அஸ்வினுக்கு மாற்றாக ஷ்ரேயஸ் கோபாலை சேர்க்க தோனி முடிவு செய்து,
அவருக்கு தீவிர பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷ்ரேயஸ் கோபால்(31), 2014ஆம் ஆண்டு முதலே ஐபிஎலில் விளையாடி வருகிறார். 52 போட்டிகளில் 19.06 ஸ்ட்ரைக் ரேட்டில், 8.16 எகனாமியில் ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .