தோனிக்கு பேட்டிங் தெரியாது என நினைத்தேன்: பிரபல வீரரின் நினைவுகள்

2010 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் நினைவலைகளை தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ஜே பகிர்ந்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றது. அதே ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்று கோப்பையையும் வென்று சென்னை அணி அசத்தியது.

இந்த தொடரில் தோனிக்கு வலைப்பயிற்சியின்போது தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ஜே பந்து வீசினார்.

அப்போது அவர் சில பந்துகளை கால்களை நகர்த்தாமல் விளையாடினார். அதனைக் கண்ட நான் தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன். அப்போது எனக்கு வயது மிகக் குறைவு.

ஆனால் அதன்பின்புதான் தெரிந்தது. தோனி மிகச் சிறந்த வீரர் என்று அன்ரிச் நார்ஜே கூறியுள்ளார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்