மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? - எஸ்.பி நேரில் விசாரணை
திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்ததார்.
காவல் நிலையத்தில் கைது உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் , சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை சுமார் 6.30 மணி அளவில் அரியலூர் மாவட்டம் ஓரியூர் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து முருகானந்தம் வயசு 37 .
இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர் ஒருவரிடம் செல்போன் திருடியதாக சமயபுரம் காவல் நிலையத்தில் முருகானந்தனை கோயில் காவலாளிகள் ஒப்படைத்தனர்.
போலீசார் முருகானந்தத்தை சமயபுரம் காவல் நிலையத்தில் உள்ள விசாரணை கைதி அறையில் வைத்து விசாரித்து வந்தனர் . இந்நிலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு முருகானந்தம் சென்றுள்ளார்.
அப்போது காவல் நிலைய பணியில் இருந்த காவலர் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்கு சென்ற போது கழிவறையில் விசாரணை கைதி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் எஸ் பி சுஜித் குமார், மணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் வருவாய் ஆய்வாளர் திவ்யா உள்ளிட்டவர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விளக்கம்
இது குறித்து சமயபுரம் போலீசார் கூறியதாவது சந்தேக முறையில் உயிரிழந்த முருகானந்தம் காவல் நிலைய கழிவறையில் அவரது இடுப்பு கழுத்தில் அணிந்திருந்த அரைஞ்கான் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்,
தற்கொலை செய்து கொண்ட முருகானந்தம் மது போதைக்கு அடிமையானவர் என்றும் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்வதாகவும் அண்மையில் இவரது தாயை அடித்து கொலை செய்த வழக்கு அரியலூர் மாவட்டம் கூத்தூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் காவல் நிலையத்தில் முருகன் என்ற விசாரணை கைதியை போலீஸார் அடித்து கொன்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது.