திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது - அச்சத்தில் பக்தர்கள்!
திருப்பதியில் மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது.
சிறுத்தை தாக்குதல்
ஆந்திர மாநிலம் நெல்லூரில் மாவட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி மலைப்பாதையில் இரவு நேரத்தில் நடந்து செல்லும்போது அவர்களின் 6 வயதான லக்ஷிதா என்ற மகளை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதனையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு வரும் பக்தர்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.
கூண்டில் சிக்கய சிறுத்தை
இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் அலிபிரி மலைப்பாதையில் நடந்து செல்வோருக்கு தற்காப்புக்காக கைத்தடி வழங்கி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மலைப்பாதையி நாத்து செல்ல நேர கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துள்ளனர்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைப்பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் 10 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். இரு சக்கர வாகனங்கள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.
இந்நிலையில்ஏற்கனவே ஒரு சிறுத்தை கூண்டில் அகப்பட்டதை அடுத்து தற்போது மேலும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. இது பக்தர்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் பதற்றம் : ஈரானை நெருங்கியது அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் IBC Tamil
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் ... அதிகரிக்கப்பட்ட நிதியுதவி IBC Tamil
இராணுவத்தினருக்கு ஓட்டுநர் பயிற்சி : எதிர்த்து நள்ளிரவு முதல் தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம் IBC Tamil