உக்ரைனில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
[6L3YV
ரஷ்யா உக்ரைன் நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்திய நிலையில்,
உக்ரைன் பொதுமக்களும் துப்பாக்கிக்களுடன் தெருக்களில் வலம் வந்து ரஷ்ய வீரர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
இதனிடையே நேற்று காலை கார்கிவ் நகரில் ரஷ்யாவின் தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் சென்றபோது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் சிக்கி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உக்ரைனில் மற்றுமொரு இந்திய மாணவர் உயிரிழந்திருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் பர்னாலாவை சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்ற 22 வயது மருத்துவம் படித்து வந்த மாணவர் திடீரென ஏற்பட்ட மூளை வாதத்தால் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது தந்தை மற்றும் மாமா மாணவருடன் இருந்துள்ளனர்.
தற்போது அவர்களும் உக்ரைனில் சிக்கியுள்ளதால் நேற்று உயிரிழந்த மாணவர் உடலை இந்தியா கொண்டு வர முடியாத நிலை உள்ளது