பாஜகவில் சர்வதிகாரம் செய்கிறார் அண்ணாமலை - ராஜினாமா செய்த மற்றொரு பாஜக நிர்வாகி

BJP K. Annamalai
By Thahir Mar 11, 2023 02:42 AM GMT
Report

பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி ராஜினாமா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பபாளர் (ஐடி பிரிவு) பதவியிலிருந்தும், பாஜகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கின்றேன்.

தம்பி அண்ணாமலைக்கு, CTR. நிர்மல்குமாரின் வளர்ச்சி (பா.ஜ.க.விலும்) சமூக ஊடகங்களிலும் தன்னைவிட அபரிமிதமான வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியவில்லை, ஆதலால் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார், ஏன் என்றால் தன் இடத்திற்கு வந்து விடுவார் என்ற அச்சம்.

தம்பி அண்ணாமலை கடந்த மாதம் (பிப்ரவரி) டில்லி செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டார் என குற்றசாட்டியுள்ளார்.

Another executive resigns from BJP

பாஜகவில் இருந்து தொடர்ந்து விலகும் நிர்வாகிகள்

அண்ணாமலைக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம், பண்பு, அன்பு, பாசம், தெளிவு மற்றும் அரசியலுக்கான சகிப்புத் தன்மை உள்ள நிர்மல்குமாரின் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவியில் இருந்து நிர்மல் குமார், திலிப் கண்ணன் விலகி அதிமுகவில் இணைந்தனர். இதன்பின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி விங் தலைவரை உள்பட 13 பேர் ஒரே நேரத்தில் விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.