ஐதராபாத்தில் மீண்டும் தெருநாய் தாக்குதல்... - 4 வயது குழந்தை பலத்த காயம்... - அதிர்ச்சி சம்பவம்..!

Hyderabad
By Nandhini Feb 22, 2023 10:39 AM GMT
Report

ஐதராபாத்தில் மீண்டும் தெருநாய் தாக்குதலில் 4 வயது குழந்தை பலத்த காயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் மீண்டும் தெருநாய் தாக்குதல்

தெருநாய்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் 4 வயது சிறுவனை தெருவில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டமாக சேர்த்து கடித்து குதறி கொன்றது.

இந்நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சைதன்யபுரியை சேர்ந்த மாருதி நகரில் ரிஷி என்ற 4 வயது சிறுவன் தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, 3-4 நாய்கள் சிறுவனை திடீரென தாக்கியது. இத்தாக்குதலில், அவன் அலறி துடித்தான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ரிஷியின் குடும்பத்தினர் ஓடி வந்து நாய்களிடமிருந்து பத்திரமாக மீட்டனர். ரத்த வெள்ளத்தில் காயமடைந்த ரிஷியை உடனடியாக குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். 

another-dog-attack-hyderabad-4-yr-old-baby