மேலும் 1.2 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் சென்னை வந்தது
மும்பையிலிருந்து மேலும் 1.2 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த,பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஆனால் மத்திய அரசு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை தமிழகத்திற்கு ஒதுக்காததால், தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மாநில அரசு,மத்திய அரசை வலியுறுத்திய நிலையில் மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்பு கிடங்கிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகளை இன்று தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அந்த தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொண்டு,இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று மதியம் சென்னை விமானநிலையம் வந்தது.
இந்த தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.