'கடவுள் ராமரை இழிவுபடுத்துகிறது' - நடிகை நயன்தாரா மீது மேலும் ஒரு பரபரப்பு புகார்!
அன்னபூரணி திரைப்படம் தொடர்பாக, நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அன்னபூரணி
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' திரைப்படம் சமீபத்தில் "நெட்பிளிக்ஸ்" ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தில் இந்து மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி கடந்த 3 நாட்களுக்கு முன்னர், மும்பை ஓசிவாரா காவல் நிலையத்தில் பஜ்ரங்தள் அமைப்பு புகார் அளித்தது.
இந்நிலையில், இந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு என்ற அமைப்பின் நிறுவனர் ரமேஷ் சோலங்கி என்பவர் தென் மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் "அன்னபூரணி திரைப்படம் கடவுள் ராமரை இழிவுபடுத்துவதுடன், இந்து மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
புகார்
கோவில் பூசாரியின் மகளாக நடித்துள்ள நயன்தாரா, கடைசி காட்சியில் பிரியாணி செய்வதற்கு முன்பு ஹிஜாப் அணிந்து நமாஸ் செய்வதாக காட்டப்பட்டுள்ளது.

மற்றொரு காட்சியில் நயன்தாரா நண்பர் பாத்திரமாக வரும் பர்கான் இறைச்சி வெட்டும்படி அவரை மூளை சலவை செய்கிறார். அதுமட்டுமின்றி ராமரும், சீதாவும் இறைச்சி சாப்பிட்டதாக கூறுகிறார். மேலும் நயன்தாரா கோவிலுக்கு செல்லாமல் பர்கானின் இடத்திற்கு இப்தாருக்கு செல்லும் மற்றொரு காட்சி உள்ளது.
எனவே நடிகை நயன்தாரா, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா மற்றும் படத்தில் தொடர்புடையவர்கள் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், லவ் ஜிகாத்தை ஊக்குவித்ததாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்" என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil