மக்கள் நீதி மய்யத்திலிருந்து மற்றுமொரு முக்கியப் பிரமுகர் விலகல்
தமிழகச் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் கடுமையாக போட்டியிட்டு தோல்வி கண்டார்.
இதனைத் தொடர்ந்து கட்சிக்குள் பல்வேறு சலசலப்பு ஏற்பட்டது. கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் ராஜினாமா செய்தனர்.
அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரனுக்கும் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு பொதுவெளியில் அறிக்கை போராக மாறியது.
மகேந்திரன் கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பொன்ராஜ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவர்களைத் தொடர்ந்து மதுரவாயல் வேட்பாளர் பத்மப்ரியா மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஆகியோரும் விலகினர்.
தற்போது மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் முருகானந்தம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர்.