முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னிர்செல்வம் தாம் தீவிர அரசியலை விட்டு விலகுவதாக அறிக்கை வெளியிட்டதால் அவரது ஆதரவாளர்கள் சத்யா பன்னீர் செல்வம் இல்லம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . 2021 சட்டமன்ற தேர்தலை பாஜக,பாமக மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் அதிமுக களம் காண்கிறது .
இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான பாமகவிற்கு அதிமுக ஒதுக்கிய நிலையில் திடீரென பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம் மீண்டும் தாம் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சொரத்தூர் ராஜேந்திரன் போட்டியிடவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்தது .
இதை தொடர்ந்து நேற்று அதிமுக மாநில மகளிர் அணி துணை செயலாளரும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னிர்செல்வம் மற்றும் அவரது கணவர் அதிமுக முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தாங்கள் அடிப்படை அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டனர்.
இதை தொடர்ந்து சத்யா பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அப்போது சத்யா பன்னிர்செல்வம் மற்றும் பன்னிர்செல்வம் மீண்டு அரசியலுக்கு திரும்பாவிட்டால் அவரது ஆதரவாளர்களும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்து உள்ளார்.
அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதால் எந்த ஒரு அசம்பாவிதங்கல் எதுவும் ஏற்படாத வண்ணம் பண்ருட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர் .