கள்ளக்குறிச்சி கலவரம் : நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது வெளியான அதிர்ச்சி தகவல்

By Irumporai Jul 17, 2022 01:57 PM GMT
Report

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலதுறையினர் சிலர் காயமடைந்தனர். மேலும் , போரட்டக்காரர்கள் சிலர் காவல் துறையின் வகனங்களை தாக்கினர், அதே சமயம் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர், பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

கள்ளக்குறிச்சி கலவரம் : நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது வெளியான அதிர்ச்சி தகவல் | Announcement That Private School Not Function

இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த நிலையில் போரட்டம் களவறமாக மாறியது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கள்ளக்குறிச்சி வன்முறை - வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ள நிலையில் கள்ளக்குறுச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டதாக கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன், சிபிஎஸ் இ நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்கம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.