திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் வரும் 20 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு

DMK BJP K. Annamalai
By Thahir May 18, 2023 04:00 PM GMT
Report

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 20 ஆம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜக போராட்டம் அறிவிப்பு 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 20 ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும், மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

announcement-of-protest-on-20th-by-bjp

மேலும் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.