சென்னை மாநகரப் பேருந்து பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..! இதோ

Government of Tamil Nadu Chennai
By Thahir Nov 25, 2022 11:44 AM GMT
Report

சென்னையில் மாநகரில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

நாளை முதல் தொடக்கம் 

பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு 300 மீட்டர் முன்பாக தமிழ், ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. பேருந்து நிறுத்த பெயர்களை ஒலிபரப்ப சென்னை மாநகர பேருந்துகளில் உட்புறத்தில் 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்படுகின்றன.

சென்னை மாநகரப் பேருந்து பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..! இதோ | Announcement For Chennai City Bus Passengers

பேருந்துகளில் நிறுத்தும் இடம் ஒலிபரப்பின் இடையில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்கவும், பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதுவும், 2,200 மாநகர பேருந்துகளில் நவம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்திருந்தது.