பாலிவுட்டில் அந்நியனை களமிறக்கும் இயக்குனர் ஷங்கர்..கதாநாயகன் யார் தெரியுமா?

bollywood shankar vikram anniyan ranveer
By Praveen Apr 14, 2021 08:50 PM GMT
Report

இயக்குநர் ஷங்கர், ரன்வீர் சிங்கை வைத்து இயக்கும் படத்தின் படபிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

விக்ரம் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன். சைக்காலஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான இதில் அம்பி, அந்நியன், ரேமோ என மூன்று கதாபாத்திரங்களில் விக்ரம் நடித்தது ரசிகர்களை கவர்ந்தது. திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இரண்டாம் பாகம் வரும் என்பதைப் போல அமைத்திருந்தார் இயக்குனர் ஷங்கர். இதனால் அந்நியன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் அந்நியன் படத்தை சில மாற்றங்கள் செய்து ரீமேக் செய்யவுள்ளார் ஷங்கர். விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ரன்வீர்சிங் நடிக்கிறார். Pan India திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கவுள்ளது. இப்படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.