‘அக்டோபர் 4 ஆம் தேதி இருக்கு கச்சேரி’ - எஸ்.பி.பி. பாடிய அண்ணாத்த பட பாடல் வெளியீடு

annaththe AnnaattheFirstSingle
By Petchi Avudaiappan Oct 01, 2021 05:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் முதல் பாடல்  வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உட்பட பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. இமான் இசையமைக்கும் இப்படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்  வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளதால் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.