ஒருபக்கம் மீனா, மறுபக்கம் குஷ்புவுடன் ஆட்டம் போடும் ரஜினிகாந்த் - அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்

Marudhaani AnnaattheThirdSingle
By Petchi Avudaiappan Oct 17, 2021 09:46 PM GMT
Report

அண்ணாத்த படத்தின் 3வது பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படமானது நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. 

ஏற்கனவே  படத்தின் டீசர், முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மருதாணி எனத் தொடங்கும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டரில் ஒரு பக்கம் மீனா, மறுபக்கம் குஷ்பு நடுவில் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளனர்.