சாதனை படைத்த ரஜினியின் அண்ணாத்த பாடல் - கொண்டாடும் ரசிகர்கள்
ரஜினியின் அண்ணாத்த பட பாடல் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான படம் அண்ணாத்த. இமான் இசையமைத்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஆனால் அண்ணாத்த படம் ரூ.200 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த...அண்ணாத்த பாடல் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே லிரிக் வீடியோவாக வெளியானது.
இந்த வீடியோ தற்போது ஒன்றரை கோடி வியூஸ்களை பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ள நிலையில், மறைந்த பாடகர் எஸ்பிபி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.