மேற்கு வங்கம் நோக்கி செல்லும் அண்ணாத்த டீம்!
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அண்ணாத்த படத்தினைசிவா இயக்க ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் சில காட்சிகள் படமாக்கி முடிந்த நிலையில் படத்துக்காக சில முக்கிய காட்சிகளைப் படமாக்க வேண்டியிருந்தது.
இந்த நிலையில் உடல் நிலை பரிசோதனைக்காக அமெரிக்காவிலிருந்து ரஜினி திரும்பியுள்ள நிலையில் படத்தின் காட்சிகளை மேற்கு வங்கத்தில் படமாக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக நாளை மேற்கு வங்கத்துக்கு பயணிக்கவுள்ளார் அண்ணாத்த படக்குழு 4 நாட்கள் படப்பிடிப்பினை முடித்து ரஜினிக்கு பிரம்மாண்ட மரியாதை செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து பணிகளையும் முடித்து தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது